8 ஆம் வகுப்பு- அலகு 4- வெப்பம்

                   8 ஆம் வகுப்பு

                அலகு 4- வெப்பம் 



1.வெப்ப ஆற்றலினால் ஏற்படும் மூன்று முக்கியமான மாற்றங்கள் எவை? A.விரிவடைதல்

B.வெப்பநிலை உயர்வு

C.நிலைமாற்றம்

D.மேற்கண்ட அனைத்தும்


2. வெப்பத்தினால் விரிவடைதல் எதில் அதிகமாக காணப்படும்?

A.வாயுக்கள்

B.திரவங்கள்

C.திடப்பொருள்

D.எதுவுமில்லை

 

3. இயற்கையாகவே திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படும் ஒரே பொருள் எது?

A.மண்

B.நீர்

C.தாவரம்

D.காற்று

 

4. திடப் பொருள் திரவமாக மாறும் பொழுது என்ன மாற்றம் உண்டாகிறது? A.பதங்கமாதல்

B.ஆவியாதல்

C.உறைதல்

D.உருகுதல்

 

5. திடப்பொருள் வாயுவாக மாறும்பொழுது என்ன மாற்றம் உண்டாகிறது?

A.குளிர்தல்

B.பதங்கமாதல்

C.ஆவியாதல்

D.உறைதல்


6. திரவம் வாயுவாக மாறும்பொழுது என்ன மாற்றம் உண்டாகிறது?

A.ஆவியாதல்

B.உருகுதல்

C.உறைதல்

D.படிதல்

 

7. திரவம் திடப்பொருளாக மாறும்பொழுது என்ன மாற்றம் உண்டாகிறது?

A.உருகுதல்

B.பதங்கமாதல்

C.உறைதல்

D.ஆவியாதல்

 

8. வாயு திரவமாக மாறும் பொழுது என்ன மாற்றம் உண்டாகிறது?

A.படிதல்

B.உருகுதல்

C.பதங்கமாதல்

D.குளிர்தல்

 

9. வாயு திடப்பொருளாக மாறும் பொழுது என்ன மாற்றம் உண்டாகிறத?

A.ஆவியாதல்

B.குளிர்தல்

C.படிதல்

D.உருகுதல்

 

10. வெப்ப பரிமாற்றம் நடைபெறும் மூன்று விதங்கள் எவை?

A.வெப்பக்கடத்தல்

B.வெப்பச்சலனம்

C வெப்பக்கதிர்வீச்சு

D.அனைத்தும்

 

11. சிறந்த வெப்பக்கடத்திகள் எவை?

A. அலோகங்கள்

B.பருப்பொருள்கள்

C.உலோகங்கள்

D.கண்ணாடிகள்


12. வெப்பத்தை எளிதாக கடத்தாத பொருள்கள் எவ்வாறு    அழைக்கப்படுகின்றன?

A.வெப்ப கடத்தா பொருள்கள்

B.காப்பான்கள்

C.மேற்கண்ட இரண்டும்

D.எதுவுமில்லை

 

13. வெப்பக் கடத்தா பொருள்கள் எ.கா எவை?

A.மரம், தக்கை

B.பருத்தி, கம்பளி

C.கண்ணாடி, இரப்பர்

D.மேற்கண்ட அனைத்தும்

 

14.  மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறைக்கு என்ன பெயர்?

A வெப்பச்சலனம்

B.வெப்ப ஆற்றல்

C.வெப்பக் கதிர்வீச்சு

D.வெப்ப கடத்தல்

 

15. நிலக்காற்று கடல்காற்று ஆகிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு என்ன காரணம்?

A.வெப்ப ஆற்றல்

B.வெப்பக்கதிர்

C.வெப்ப மாற்றம்

D.வெப்பச்சலனம்

 

16. வெப்பக் காற்று பலூன்களில் எதன் மூலம் வெப்பம் கடத்துவதால் பலூன் மேலே உயருகிறது?

A வெப்பக்கடத்தல் 

B.வெப்பச்சலனம்

C.வெப்ப மாற்றம்

D. எதுவுமில்லை

 

17. வெப்பம் பருப்பொருட்களில் எவ்வாறு பரவுகிறது?

A.திடப்பொருள்- வெப்பக்கடத்தல்

B.திரவம், வாயுக்கள்- வெப்பச்சலனம்

C.வெற்றிடம்- வெப்பக் கதிர்வீச்சு

D.மேற்கண்ட அனைத்தும்

 

18. வெப்ப ஆற்றலானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த அலைகளாக பரவும் முறைக்கு என்ன பெயர்?

A.வெப்பக்காற்று

B.வெப்பக்கதிர்வீச்சு

C.வெப்ப மாற்றம்

D.வெப்ப ஆற்றல்

 

19. எந்த வெப்பநிலைக்கு ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது கதிர்வீச்சானது மங்கிய சிவப்பு நிறத்தில் நமது கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது?

A.500°C

B.300°C

C.100°C

D.800°C

 

20. வெப்பத்தினால் மங்கிய சிவப்பு நிறத்தில் தெரியும் பொருளை மேலும் வெப்பப்படுத்தும் போது என்ன நிறமாக மாறும்?

A.ஆரஞ்சு

B.மஞ்சள்

C.இறுதியாக வெள்ளை

D.மேற்கண்ட அனைத்தும்

 

21. வெப்பநிலையை அளவிட எந்த அளவுகோல் பயன்படுத்தப்படுகின்றன?

A.செல்சியஸ் அளவுகோல்

B.ஃபாரன்ஹீட் அளவுகோல்

C.கெல்வின் அளவுகோல்

D.அனைத்தும்

 

 

22. வெப்ப ஆற்றலின் SI அலகு முறை என்ன?

A.ஆம்பியர்

B.மோல்

C.ஜுல்

D.கெல்வின்

 

23. வெப்பத்தை அளவிட பொதுவாக பயன்படுத்தப்படும் அலகு எது?

A.கெல்வின்

B.ஆம்பியர்

C.கலோரி

D.மோல்

 

24. உணவுப் பொருள்களில் உள்ள ஆற்றலின் அளவு எவ்வாறு குறிப்பிடப்படும்?

A.கிலோ கலோரி

B.கிலோ கிராம்

C.ஆற்றல் கலோரி

D.ஜுல்

 

25. ஒரு பொருள் ஏற்கும் அல்லது இயக்கும் வெப்பத்தின் அளவானது எத்தனை காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது?

A.ஐந்து

B.இரண்டு

C.ஏழு

D.முன்று

 

26. வெப்ப ஏற்புத்திறன் SI அலகு என்ன?

A.JK-1

B.JK-6

C.JK-3

D.JK-5


27. ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C (அ) 1K உயர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவு என்பது என்ன?

A.வெப்ப ஆற்றல்

B.தன் வெப்ப ஏற்புத்திறன்

C.வெப்ப ஏற்புத்திறன்

D.வெப்பக் கதிர்வீச்சு

 

28. பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிட பயன்படுத்தப்படும் கருவி எது?

A.ஆம்பியர்

B.கலோரி மீட்டர்

C.கிலோ கிராம்

D.கிலோமீட்டர்

 

29. முதல் முதலாக பனிக்கட்டிகள் ஒரு மீட்டரை பயன்படுத்தியவர்கள் யார்?

A.ஆன்டொய்ன் லவாய்சியர்

B.பியரே சைமன் லாப்லாஸ்

C.மேற்கண்ட இரண்டும்

D.எதுவுமில்லை

 

30. ஒரு பொருள் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் எது?

A.வெப்பக் கட்டுப்படுத்தி

B.தெர்மோஸ்டாட்

C.மேற்கண்ட இரண்டும்

D.எதுவுமில்லை

 

31. தெர்மோஸ்டாட் என்பதன் பொருள் என்ன?

A.தெர்மோ- வெப்பம்

B.ஸ்டாட்- அதேநிலையில் இருப்பது

C.மேற்கண்ட இரண்டும்

D.எதுவுமில்லை

 

 

32. குளிர்சாதனப்பெட்டியில் குளிர்ந்த காற்று,கீழ் நோக்கி இடம்பெயர்ந்து,சூடான காற்றை எதன் மூலம் இடமாற்றம் செய்கிறது?

A.வெப்ப ஆற்றல்

B.வெப்பச்சலனம்

C.வெப்பக்கதிர்வீச்சு

D.வெப்ப மாற்றம்

 

33. தெர்மோஸ்டாட் என்ற சொல் எதிலிருந்து எடுக்கப்பட்டது?

A.கிரேக்கம்

B.இலத்தின்

C.ஸ்பானியம்

D.துலு

 

34. பொருளின் வெப்பநிலையை சுற்றுப்புறத்தில் உள்ள வெப்ப நிலையைவிட அதிகரிக்க விடாமல் அல்லது குறைக்க விடாமல் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடிய வெப்பத்தை கடத்தாமல் உதவும் சேமிப்புக்கலன் எது?

A.வெற்றிடக் குடுவை

B.வெப்பக்குடுவை

C.மேற்கண்ட இரண்டும்

D.எதுவுமில்லை

 

35. வெற்றிடக் குடுவை முதன்முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

A.1876

B.1866

C.1892

D.1897

 

36. வெற்றிடக் குடுவை முதன் முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

A.ஆன்டொய்ன் லவாய்ஸியர்

B.பியரே சைமன் லாப்லாஸ்

C.சர் ஜேம்ஸ் திவான்

D.மைக்கேல் பாகில்


37. வெற்றிடக் குடுவையின் வேறு பெயர்கள் எவை?

A.திவார் குடுவை

B.திவார் பாட்டில்

C.மேற்கண்ட இரண்டும்

D.எதுவும் இல்லை


38. சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் எதன் மூலம் பூமியை வந்தடைகிறது?

A.வெப்பச்சலனம்

B.வெப்பக் கதிர்வீச்சு

C.வெப்பக் கடத்தல்

D.எதுவும் இல்லை

 

39. நெருப்பிற்கு அருகில் இருக்கும் போது நம் உடல் எவ்வாறு வெப்பத்தை உணருகிறது?

A.வெப்பக் கதிர்வீச்சு

B.வெப்பச்சலனம்

C.வெப்பக் கடத்தல்

D.எதுவும் இல்லை

 

40. எந்த நிறமானது வெப்ப கதிர்வீச்சினை எதிரொளிக்கின்றது?

A.கருப்பு

B.சிகப்பு

C.மஞ்சள்

D.வெண்மை

 

41. வெப்பநிலையை அளவிட பொதுவாக பயன்படுத்தப்படும் அளவுகோல் எது?

A.செல்சியஸ் அளவுகோல்

B.ஃபாரன்ஹீட் அளவுகோல்

C.கெல்வின் அளவுகோல்

D.எதுவுமில்லை

 

42. ஒரு கலோரி என்பது எத்தனை ஜூல்?

A.4.167J

B.4.189J

C.4.134J

D.4.178J

 

43. ஒரு கிலோ கலோரி என்பது எவ்வளவு?

A.4200J

B.3200J

C.5200J

D.6200J

 

44. ஒரு கிலோகிராம் நிறையுள்ள பொருள் ஒன்றின் வெப்பநிலையை ஒரு 1°C அல்லது 1K உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு?

A.வெப்ப ஏற்புத்திறன்

B.தன் வெப்ப ஏற்புத்திறன்

C.வெப்ப ஆற்றல்

D.வெப்பச்சலனம்

 

45. வெப்ப ஏற்புத்திறன் அலகு என்ன?

A.கலோரி/°C

B.°C/கலோரி

C.கலோரி

D.°C

 

46. தன் வெப்பை ஏற்புத்திறன் SI அலகு என்ன?

A.JKg-1 K-2

B.JKg-2 K-3

C.JKg-1 K-1

D.JKg-2 K-2

 

47. நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் எவ்வளவு?

A.4200 JKg-2 K-2

B.4200 JKg-1 K-2

C.4200 JKg-2 K-1

D.4200 JKg-1 K-1

 

48. வெப்ப கட்டுப்படுத்தி எதில் பயன்படுத்தப்படுகிறது?

A.கட்டிடங்களிலுள்ள சூடேற்றி, நீர் சூடேற்றி

B.அறைகளின் மைய சூடேற்றி, காற்றுப்பதனாக்கி

C.சமையலறையிலுள்ள  நுண்ணலை அடுப்பு

S.மேற்கண்ட அனைத்தும்

 

49.  சர் ஜேம்ஸ் திவான் எந்த நாட்டு அறிவியலாளர் ஆவார்?

A.ஸ்காட்லாந்து

B.தென் ஆப்பிரிக்கா

C.அமெரிக்கா

D.இந்தியா

 

50. வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் எந்த நிகழ்வின் மூலம் வெப்பமடைகின்றன?

A.வெப்பக் கடத்தல்

B.வெப்பக் கதிர்வீச்சு

C.வெப்பச்சலனம்

D.எதுவுமில்லை


வினாடி வினாவில் பங்கேற்க👇

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran