8 ஆம் வகுப்பு -அலகு- 3-ஒளியியல்

   8 ஆம் வகுப்பு

அலகு-3 ஒளியியல் 


கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒளியியல் வினா-விடைகளை படிக்கும் முன்னரே இணையவழி தேர்வு (ONLINE EXAM) இல் பங்குபெற 👇



8 ஆம் வகுப்பு -அலகு- 3-ஒளியியல்

01. ஆடியில் என்ன முலாம் பூசப்பட்டு இருக்கும்?


அலுமினியம்

சில்வர்

மேற்கண்ட இரண்டும்

குரோமியம்


02. ஆடிகளின் இரு வகைகள் யாவை?


சமதள  ஆடிகள், குவி லென்ஸ்

குழி லென்ஸ், கண் கண்ணாடி

பரவளைய ஆடிகள்,தண்ணீர்

சமதள ஆடிகள் வளைந்த பரப்புடைய ஆடிகள்


03. வளைந்த பரப்புகளை உடைய ஆடிகள் எவை?


கோளக ஆடிகள், உருளை அடிகள்

பரவளைய ஆடிகள் ,நீள்வட்ட வடிவ ஆடிகள்

மேற்கண்ட இரண்டும் சரி

மேற்கண்ட இரண்டும் தவறு

04.கோளத்தின் மேற்பரப்பிலிருந்து வெட்டப்பட்ட சிறிய பரப்பினை போன்ற வடிவத்தை கொண்டது?


உருளை ஆடிகள்

கோளக ஆடிகள்

 பரவளைய ஆடிகள்

நீள்வட்ட வடிவ ஆடிகள்


05. கோளக ஆடியின் குழிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால்?


குவி ஆடி

உருளை ஆடி

குழி ஆடி

பரவளைய ஆடி


06. கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால்?


குவி ஆடி

குழி ஆடி

வளைய  ஆடி

நீள்வட்ட ஆடி


07. அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி எது?


குவி ஆடி

உருளை ஆடி

பரவளைய ஆடி

குழி ஆடி

08.சாலைகளில் பின்புறம் வரக் கூடிய வாகனங்களை காண்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடி எது?

A.    சமதள ஆடி

B.   குவி ஆடி

C.    குழியாடி

D.  உருளை ஆடி

09. எந்த ஆடி தன் அருகில் வைக்கப்பட்ட பொருளை பெரிதாக காட்டும்?

A.    குவி ஆடி

B.     உருளை ஆடி

C.     குழி ஆடி*

D.    கோளக ஆடி


10. பரவளைய எதிரொளிப்பான்கள் 

என்று அழைக்கப்படுவது?

A.    பரவளைய ஆடி

B.     குழி ஆடி

C.     குவி ஆடி

D.    கோளக ஆடி

 

11. ஒளி, வெப்பம், ஒலி, ரேடியோ அலைகள் போன்றவற்றை அவற்றின் ஆடியின் புவிப்பரப்பில் வீழ்த்தி சேகரிக்க பயன்படுவது?

A.    சமதள ஆடி

B.     கோளக ஆடி

C.     உருளை ஆடி

D.    பரவளைய ஆடி

 

12. எதிரொலிக்கும் தொலைநோக்கிகள, ரேடியோ தொலைநோக்கிகள், நுண் அலை தொலைபேசி கருவிகளில் பயன்படுவது?

A.    கோளக ஆடி

B.     சமதள ஆடி

C.     உருளை ஆடி

D.    பரவளைய ஆடி

 

13. பரவளைய ஆடிகள் பற்றிய தகவல்கள் யாருடைய நூலில் காணப்படுகிறது?

A.    இபின் ஷால்

B.     டையோகிள்ஸ்

C.     ஹென்ரி ஹெர்ட்ஸ்

D.    அனைத்தும் தவறு

 

14. எரிக்கும் ஆடிகள் என்ற நூலை எழுதியவர் யார்?

A.    ஹென்றி ஹெர்ட்ஸ்

B.     இபின்ஷால்

C.     கணித வல்லுநர் டையோகிள்ஸ்

D.    பாயில்

 

15.கிரேக்க-உரோமானியர் காலத்திலிருந்து எந்த ஆடியின் தத்துவம் அறியப்பட்டிருந்தது?

A.    கோளக அடிகள்

B.     உருளை அடிகள்

C.     பரவளைய ஆடிகள்

D.    நீள்வட்ட வடிவ ஆடிகள்

 

16. 10  நூற்றாண்டில் பரவளைய ஆடி களைப்  பற்றி ஆராய்ந்தவர் யார்?

A.    ஹென்றி ஹெர்ட்ஸ்

B.     டையோகிள்ஸ்

C.     இபின் ஷால்

D.    பாயில்

 

17.பரவளைய ஆடியை   "எதிரொளிக்கும் வானலை வாங்கி" வடிவில் வடிவமைத்தவர் யார்?

A.    ஹென்றி ஹெர்ட்ஸ்

B.     டையோகிள்ஸ்

C.     இபின் ஷால்

D.    பாயில்

 

18. ஒளியை எதிரொளிக்கும் பண்பினை பெற்றுள்ள பளபளப்பான ஒளியியல் சாதனம் எது

A.    ஆடி

B.     லென்ஸ்

C.     ரப்பர் 

D.    தண்ணீர்

 

19. ஆடி மையத்தை எந்த எழுத்தால் குறிக்கலாம்?

A.    S

B.    D

C.    P

D.    N

 

20. ஆடி மையம் என்பது என்ன?

A.    ஆடி உருவாக்கப்பட்ட கோளத்தின் மையம்

B.    கோளக ஆடியின்  வடிவியல் மையம்

C.    ஆடியின் பரப்பில் முதன்மையானது ஆடியை சந்திக்கும் புள்ளி

D.   ஆடியின் முனை

 

21. கோளத்தின் மையத்திற்கும் அதன் முனைக்கும் இடைப்பட்ட தொலைவு?

A.    வளைவு மையம்

B.    ஆடி மையம்

C.    வளைவு ஆரம்

D.    ஆடியின் முனை

 

22. ஆடி முனையின் மற்றொரு பெயர் என்ன

A.    ஆடி மையம்

B.    வளைவு மையம் 

C.    குவியம் 

D.    வளைவு ஆரம்

 

23. ஆடி மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு?

A.    வளைவு ஆரம்

B.    முதன்மை அச்சு

C.    ஆடி மையம்

D.    குவியத் தொலைவு

 

24. குவியத் தொலைவு=__________?

A.    வளைவு ஆரம்/3

B.    வளைவு ஆரம்/2

C.    வளைவு மையம்/2

D.    2/வளைவு மையம்

 

25. குவி  ஆடியில் தோன்றும் பிம்பம்?

A.    நேரான, சிறிய ,மாய பிம்பம்


B.    தலைகீழான, பெரிய, மெய் பிம்பம்


C.    மிகவும் சிறிய ,தலைகீழான,மெய்பிம்பம்

D.   பெரிய ,நேரான ,மாயபிம்பம்

 

26. ஒளி எதிரொளித்தலில்  எந்தெந்த கதிர்கள் ஈடுபடுகின்றன?

A.    படுகதிர், குத்துக்கோடு

B.    குத்துக்கோடு, எதிரொளிப்புக்கதிர்

C.    படுகதிர், எதிரொளிப்பு கதிர்

D.    மேற்கண்ட அனைத்தும் சரி

 

27. மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்பு பொருள் எது?

A.    காப்பர்

B.    அலுமினியம்

C.    வெள்ளி

D.    குரோமியம்

 

28. எதிரொளிக்கும் அளவானது எதனை பொறுத்தது?

A.   எதிரொளிக்கும் பொருளின் நிலையை

B.   எதிரொளிக்கும் பொருளின் பரப்பை

C.   எதிரொளிக்கும் பொருளின் எடையை

D.   மேற்கண்ட அனைத்தும் சரி.

 

29. ஒரு ஒளிக்கற்றையானது குழிஆடியில் பட்டு எதிரொளித்த பின் முதன்மை அச்சில் எந்த புள்ளியில் குவியும்

A.    முதன்மைக் குவியம் 

B.   ஆடி மையம் 

C.   ஆடி முனை 

D.  வளைவு மையம்

 

30.வழவழப்பான பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது விழும்போது நிகழும்  எதிரொளிப்பு?

A.   ஒழுங்கற்ற எதிரொளிப்பு

B.    ஒழுங்கான எதிரொளிப்பு

C.    சொரசொரப்பான எதிரொளிப்பு

D.    பன்முக எதிரொளிப்பு

 

31. ஒழுங்கான எதிரொளிப்புக்கு எடுத்துக்காட்டுகள்?

A.  சமதள கண்ணாடியில் உருவாகும் எதிரொளிப்பு

B.   நிலையான தண்ணீரில் ஏற்படும் எதிரொளிப்பு

C.    மேற்கண்ட இரண்டும்

D.    சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு

 

32.சொரசொரப்பான பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது விழும் போது நிகழும் எதிரொளிப்பு?

A.   ஒழுங்கான எதிரொளிப்பு

B.   ஒழுங்கற்ற எதிரொளிப்பு

C.   கண் கண்ணாடியில் ஏற்படும் எதிரொளிப்பு

D.   கண்ணில் தோன்றும் எதிரொளிப்பு

 

33. பெரிஸ்கோப் முற்பகுதியில் கண்ணாடியானது எந்த கோண அளவில் வைக்கப்பட்டிருக்கும்

A.    45°

B.    90° 

C.    180°

D.    60°

 

34. ஒழுங்கற்ற எதிரொளிப்பின் மற்றொரு பெயர் என்ன?

A.    கண்ணாடி எதிரொளிப்பு

B.    பன்முக எதிரொளிப்பு

C.    விரவலான எதிரொளிப்பு

D.    கண் எதிரொளிப்பு

 

35. ஒழுங்கற்ற எதிரொளிப்பிற்கு எடுத்துக்காட்டு?

A.   சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு

B.   சமதள கண்ணாடியில் உருவாகும் எதிரொளிப்பு

C.   நிலையான தண்ணீரில் ஏற்படும் எதிரொளிப்பு

D.   கண்ணாடி எதிரொளிப்பு

வினாடி வினாவில் பங்கு பெற 

கீழேயுள்ள CLICK HERE யை தொடவும்




// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran